அமெரிக்காவை பழிவாங்க புதிய நகர்வு! குண்டுகள் பொருத்தப்பட்ட வான்கலங்களுடன் மிரட்டல்
அமெரிக்காவின் முன்னாள் அரச தலைவர் டொனால்ட் ட்ரம்பை கொலைசெய்து பழிவாங்கப்போவதாக ஈரானிய அரச தலைவர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) சூளுரைத்துள்ளார்.
ஈரானின் முன்னாள் இராணுவத் தளபதி காசிம் சொலைமானி பக்தாத்தில் வைத்து அமெரிக்காவினால் படுகொலைசெய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டபோது இந்தச் சூளுரை விடுக்கப்பட்டுள்ளது.
பக்தாத் விமான நிலையத்தில் நிலை கொண்டுள்ள அமெரிக்க துருப்புக்களை இலக்குவைத்து குண்டுகள் பொருத்தப்பட்ட இரண்டு ஆளில்லா வான்கலங்கள் மூலம் தாக்குதல் நடத்த முயற்சிகள் நடத்தப்பட்டுள்ள பின்னணியில் இந்தச் சூளுரை விடுக்கப்பட்டுள்ளது.
ஈராக்கின் பக்தாத் விமான நிலையத்திற்கு வெளியே கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி ஆளில்லா வான்கலங்கள் மூலம் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் ஈரானிய இராணுவப் புரட்சிப் படையின் தலைவரான சொலைமானி கொல்லப்பட்டடிருந்தார்.
ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததால் அவர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்போதைய அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் காசிம் சொலைமானியின் இரண்டாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் உரையாற்றிய ஈரானிய அரச தலைவர் இப்ராஹிம் ரைசி ட்ரம்ப்பை கொலைசெய்து பழிவாங்கப்போவதாக சூளுரைத்துள்ளார்.
இதற்கிடையே நேற்று பக்தாத் விமான நிலையத்தில பாதுகாப்புக்கு நிலைகொண்டுள்ள அமெரிக்க துருப்புக்களை இலக்குவைத்து குண்டுகள் பொருத்தப்பட்ட இரண்டு ஆளில்லா வான்கலங்கள் அனுப்பட்டடிருந்தன.
ஆயினும் அந்தக் கலங்கள் இரண்டும் நடுவானில் வைத்தே சுடப்பட்டுள்ளன.
இந்தக் கலங்களில் சொலைமானிக்குரிய பழிவாங்கல் என அரபு மொழியில் எழுதப்பட்டிருந்தது.