நிரந்தரமான போர் நிறுத்தத்தை நாடி அமெரிக்காவுக்கு ஈரான் முக்கிய செய்தி
நிரந்தரமான போர் நிறுத்தத்தை நாடி, ஈரான் அமெரிக்காவிற்கு தூதரக மற்றும் இராணுவ ரீதியான செய்திகளை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எந்த நேரத்திலும் நிலைமை கைமீறிப் போய்விடக்கூடும் என்று ஈரானியர்கள் உணரும் ஒரு சூழ்நிலையை அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக குறித்த ஊடக செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வளைகுடா பிராந்திய கடலில் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துவரும் பின்னணியில் இந்த நகர்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானியர்களின் செய்திகள்
இதன் காரணமாகவே இருதரப்பும் ஒரு நிரந்தரமான போர்நிறுத்தத்தையும், போரின் நிரந்தர முடிவையும் நாடி, அதன் பிறகு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் போர் முடிவுக்கு வராததால், ஈரானியர்கள் பல்வேறு செய்திகளை அனுப்பி வருகின்றனர்.
இதில் முதலாவது ஒன்று, பிரதமர் மற்றும் பிற அதிகாரிகள் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பது போன்ற ராஜதந்திர வழிமுறை.
இரண்டாவது எதிரியின் எந்தவிதமான தவறான கணிப்பிற்கும் தாங்கள் தயாராக இருப்பதாகக் கூறும் இராணுவ வழிமுறை.
இவ்வாறான நிலையில் இருதரப்பின் முடிவுகள் மீது சர்வதேசம் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்