கொண்டாடும் கமேனி: முதல் அறிவிப்பிலேயே அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சாட்டையடி!!

Benjamin Netanyahu Donald Trump Iran-Israel War Ayatollah Ali Khamenei
By Dilakshan Jun 26, 2025 12:19 PM GMT
Report

புதிய இணைப்பு

ஈரான் அணுதிட்டத்தின் மீதான அமெரிக்க தாக்குதல் சர்வதேச சட்டப்படி குற்றமாக இருந்தாலும், அவை பெரிய சேதத்தை ஏற்படுத்தவில்லை என உச்ச தலைவர்  அலி கமேனி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தத்திற்கு பின்னரான அலி கமேனி முதல் உரை ஈரானிய அரச தொலைக்காட்சி சனலில் வெளியானது.

அமெரிக்காவின் தாக்குதல்

அதன்போது,  அவர், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதுபோல், ஈரானின் அணுத் திட்டம் அழிக்கப்பட்டதாகக் கூறுவது மிகைப்படுத்தல் மட்டுமே என்றும், உண்மையில் அமெரிக்காவின் தாக்குதலால் எதுவும் சிறப்பாக நடைபெறவில்லை என்றும் வலியுறுத்தினார்.

கொண்டாடும் கமேனி: முதல் அறிவிப்பிலேயே அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சாட்டையடி!! | Iran S Supreme Leader Khamenei To Appear In Public

இத்தாக்குதல்கள் சர்வதேச சட்டப்படி குற்றமானாலும் அவை பெரிய சேதத்தை ஏற்படுத்தவில்லை என சுட்டிக்காட்டினார்.

அமேரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஈரானிடம் இருந்து சரணடைவை எதிர்பார்க்கின்றனர் என்று கூறிய கமேனி, இது ஒரு மிகப்பெரிய அவமதிப்பு எனக் கண்டித்தார்.

சரணடைவு 

“ஈரான் போன்ற ஒரு பெரும் தேசத்திடம் சரணடைய வேண்டும் என்று கூறுவது அவர்களுக்கு பெரியது. சரணடைவு என்பது எங்கள் மக்களுக்கு ஒருபோதும் ஏற்படப்போவதில்லை. நாங்கள் ஒன்றுபட்ட, வலிமையான மக்கள்” என அவர் தெரிவித்தார்.

கொண்டாடும் கமேனி: முதல் அறிவிப்பிலேயே அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சாட்டையடி!! | Iran S Supreme Leader Khamenei To Appear In Public

ட்ரம்ப் “ஈரான் சரணடைய வேண்டும்” என்று கூறியதை "அவரது வாய்க்கு மிகுந்த அளவான வார்த்தை" எனக் கமேனி கிண்டலாக கூறினார்.

அத்துடன், இஸ்ரேலின் பல அடுக்குகளைக் கொண்ட பாதுகாப்பு அமைப்புகளை ஈரான் உடைத்துவிட்டு, இராணுவ தளங்களையும் நாகரிக இடங்களையும் தாக்கியதையும் அவர் வெற்றியாகக் கூறினார்.

போரில் வெற்றி

இதனுடன், கத்தாரில் உள்ள அமெரிக்க படைத்தளத்தில் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதையும் எடுத்துக்காட்டிய அவர், அந்த தாக்குதலால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், அது ஒரு சக்திவாய்ந்த எச்சரிக்கையாக அமைந்தது என்று தெரிவித்தார்.

கொண்டாடும் கமேனி: முதல் அறிவிப்பிலேயே அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சாட்டையடி!! | Iran S Supreme Leader Khamenei To Appear In Public

இதன்படி, ஈரானின் தாக்குதல்களை அமெரிக்கா முன்கூட்டியே அறிந்திருந்தாலும், எதையும் தடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை என அவர் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக மீண்டும் தாக்குதல் ஏதும் நடத்தப்பட்டால் அதற்கான செலவு எதிரிகளுக்கு மிகுந்ததாகவே இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும், எவ்வளவு தாக்குதல்கள் வந்தாலும், ஈரான் எந்த நிலையிலும் சரணடையாது என்றும், இந்தப் போரில் வெற்றி பெற்றதும் இஸ்லாமிய குடியரசே எனவும் உறுதியாகக் கூறினார்.

முதலாம் இணைப்பு

இஸ்ரேல் அழிந்து விடும் என்ற பயத்திலேயே அமெரிக்கா யுத்தத்தில் இறங்கியதாக ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி விமர்சித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து கமேனி வெளியிட்டுள்ள முதல் அறிக்கை இதுவாகும்.

ஈரானில் பரபரப்பு: மாயமான உச்ச தலைவர் அலி கமேனி

ஈரானில் பரபரப்பு: மாயமான உச்ச தலைவர் அலி கமேனி

ஈரானின் வெற்றி

அதில், “அமெரிக்க ஆட்சியை ஈரான் வென்றதற்கு எனது வாழ்த்துக்கள். அமெரிக்க ஆட்சி நேரடியாகப் போரில் நுழைந்தது, ஏனெனில் அது அவ்வாறு செய்யவில்லை என்றால், சியோனிச ஆட்சி முற்றிலுமாக அழிக்கப்படும் என்று அது உணர்ந்தது.

அந்த ஆட்சியைக் காப்பாற்றும் முயற்சியில் அது போரில் நுழைந்தது, ஆனால் எதையும் சாதிக்கவில்லை.” என அவர் என தெரிவித்துள்ளார்.

நெதன்யாகுவின் மெய்பாதுகாவலரான ட்ரம்ப்: மூக்கை நுழைக்கும் புதிய விவகாரம்!

நெதன்யாகுவின் மெய்பாதுகாவலரான ட்ரம்ப்: மூக்கை நுழைக்கும் புதிய விவகாரம்!

வெளியிடப்பட்ட அறிவிப்பு

இதேவேளை, முன்னதாக வெளியிட்டுள்ள பதிவில், இஸ்லாமிய குடியரசு அமெரிக்காவின் முகத்தில் ஒரு பெரிய அடியைக் கொடுத்தது. அது பிராந்தியத்தில் உள்ள முக்கிய அமெரிக்க தளங்களில் ஒன்றான அல்-உதெய்த் விமானத் தளத்தைத் தாக்கி சேதப்படுத்தியது.” என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

கொண்டாடும் கமேனி: முதல் அறிவிப்பிலேயே அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சாட்டையடி!! | Iran S Supreme Leader Khamenei To Appear In Public

இந்த நிலையில், இரண்டு வாரங்கள் பொது நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கியிருந்த ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி, இன்று தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பக்கத்தில் உரையொன்றை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.  

F35 போர் விமானங்களை வாங்கும் பிரித்தானியா - வரவேற்கும் மார்க் ருட்டே

F35 போர் விமானங்களை வாங்கும் பிரித்தானியா - வரவேற்கும் மார்க் ருட்டே

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025