அமெரிக்காவுக்கு ஈரானின் புரட்சிகர காவல் படை விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!
ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்காவின் முக்கிய நலன்கள் மற்றும் எரிசக்தித் தடைப் புள்ளிகள் மீது பலத்த பதிலடித் தாக்குதல்கள் நடத்தப்படும் ஈரான் எச்சரித்துள்ளது.
குறித்த எச்சரிக்கையை ஈரானின் புரட்சிகர காவல் படையின் (IRGC) செய்தித் தொடர்பாளர் ஹொசைன் மொஹெப்பி வெளியிட்டுள்ளார்.
ஈரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB வழியாக அவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
எதிரிகளின் தவறான கணிப்பு
ஈரானின் ஆயுத உற்பத்தி தடையின்றித் தொடர்ந்து நடைபெற்று வருவதால், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது உள்ளிட்ட அமெரிக்காவின் இலக்குகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரானிய இராணுவத்திடம் குறைந்த அளவிலான ஆயுதக் கையிருப்பே உள்ளது என்ற எதிரிகளின் தவறான கணிப்புக்கு மாறாக, நாட்டின் அதிநவீன மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |