அமெரிக்க H-1B தொழிலாளர் விசாக்களுக்கு 100,000டொலர்க்கும் அதிக கட்டணம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், அதிக திறன் கொண்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான புதிய H-1B விசாக்களுக்கு 103,265 அமெரிக்க டொலர் (சுமார் ரூ. 3கோடிக்கும் அதிகம்) கட்டணம் விதிக்கும் முன்மொழியப்பட்ட விதிமுறையை வெளியிட்டுள்ளது.
இந்தக் கட்டணம் கடந்த ஆண்டு ட்ரம்ப் நிர்வாகத்தால் தற்காலிக உத்தரவின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், அதை அறவிட அமெரிக்க நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன.
கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை
தொழில்நுட்பம், கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் பெரிதும் பயன்படுத்தப்படும் H-1B விசாக்களின் செலவை இந்தக் கட்டணம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையடுத்து பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து 30 நாட்களுக்கு கருத்துகள் பெறப்படும் என அமெரிக்க தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
இந்த விதிமுறை இந்த ஆண்டின் இறுதிக்குள் இறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
H-1B விசா
H-1B விசா திட்டத்தின் கீழ், அமெரிக்க நிறுவனங்கள் சிறப்பு திறன் மற்றும் பயிற்சி தேவைப்படும் துறைகளில் பணியாற்றுவதற்காக வெளிநாட்டு ஊழியர்களை நியமிக்க முடியும்.
ஒவ்வொரு ஆண்டும்: 65,000 H-1B விசாக்கள் வழங்கப்படுகின்றன. மேம்பட்ட கல்வித் தகுதி கொண்டவர்களுக்கு கூடுதலாக 20,000 விசாக்கள் வழங்கப்படுகின்றன.
விசாக்கள் பொதுவாக 3 முதல் 6 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். கட்டணத்தில் மிகப்பெரிய உயர்வு இதுவரை H-1B விசாவைப் பெறுவதற்கான கட்டணங்கள், பல்வேறு காரணிகளைப் பொறுத்து பொதுவாக சுமார் 2,000 டொலர் முதல் முதல் 5,000 டொலர் வரை இருந்தன.
ஆனால் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், குறிப்பிட்ட புதிய H-1B விசாக்களுக்கு 103,265 டொலர் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் வெளிநாட்டு திறமையான பணியாளர்களை அமெரிக்காவில் நியமிக்கும் நிறுவனங்களுக்கு செலவு பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |