அமெரிக்கப் போர் விமானங்களைக் குறிவைத்து ஈரானின் அதிரடி தாக்குதல்!
ஜோர்டானில் உள்ள அல்-அஸ்ராக் (al-Azraq) இராணுவத் தளத்தில் நிலைகொண்டுள்ள அமெரிக்கப் போர் விமானங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ட்ரோன் (UAV) மூலம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக உரிமை கோரியுள்ளது.
ஈரானிய இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கை எண் 52 இன் படி, இன்று அதிகாலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வான்வழி நடவடிக்கை
அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்கள், தளவாடக் கிடங்குகள் மற்றும் துருப்புகள் தங்கியிருக்கும் பகுதிகளை இலக்காகக் கொண்டு தற்கொலைப்படை ட்ரோன்கள் ஏவப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிரான வான்வழி நடவடிக்கைகளுக்கு இந்தத் தளம் பயன்படுத்தப்படுவதால் அதனை முடக்கும் நோக்கில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முவாஃபக் சால்டி (Muwaffaq Salti) என்றும் அழைக்கப்படும் இந்த அல்-அஸ்ராக் விமானத் தளம், மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் மிக முக்கியமான மூலோபாய மையங்களில் ஒன்றாகும்.
உளவு பார்க்கும்
இங்கிருந்துதான் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் போர் விமானங்கள் மற்றும் உளவு பார்க்கும் ட்ரோன்கள் இயக்கப்படுகின்றன.

ஏற்கனவே கடந்த மார்ச் 29 அன்று இதே தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு பெரிய அளவிலான ட்ரோன் தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், போர் விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிவித்துவரும் நிலையில் ஈரானின் இந்தத் தொடர் தாக்குதல்கள் போர்க்களச் சூழலை மேலும் சிக்கலாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |