இஸ்ரேலுக்கு அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்த ஈரான்...!
இஸ்ரேலுக்கு (Israel) ஈரான் (Iran) அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியாவில் (Syria) உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்கு தல் நடத்திய நிலையில் மேலும் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அதற்குப் பதிலடி மிகவும் உக்கிரமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்திருந்தது.
அணுகுண்டு தாக்குதல்
இந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு தாக்குதல் மிரட்டல் விடுத்துள்ள நிலையில் இதுகுறித்து ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ali Khamenei) ஆலோசகர் கமல் கர்ராசி (Kamal Kharazi) அவரது கருத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “அணு குண்டை உருவாக்குவது குறித்து எங்களிடம் எந்த முடிவும் இல்லை.
உலக வல்லரசு நாடு
அணுஆயுதங்களை பெற்றுக் கொள்ளுதல் அல்லது உற்பத்தி செய்தல் போன்ற எண்ணம் எங்களுக்கு இல்லை ஆனால் ஈரானின் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் எங்கள் இராணுவக் கோட்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.
இஸ்ரேல் எங்களது அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தினால் எங்களது தடுப்பு நடவடிக்கையில் மாற்றம் ஏற்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உலக வல்லரசு நாடுகளுடன் 2015 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்தை மீறி ஈரான் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக யுரேனியத்தை 60 சதவீதம் செறிவூட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |