ஹோர்முஸ் நீரிணை கப்பல்களுக்கு ஈரான் விடுத்த மிரட்டல்! பிரித்தானியா உள்ளிட்ட கூட்டணியின் எச்சரிக்கை
பிரித்தானியா மற்றும் அதன் கூட்டணி நாடுகள், ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் மிரட்டல் விடுத்ததை கடுமையாக கண்டித்துள்ளன.
கப்பல்களை தீ வைத்து அழிப்போம் என ஈரான் மிரட்டியதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் தலைவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில், கடல் வழிச் சுதந்திரம் என்பது சர்வதேச சட்டத்தின் அடிப்படை கோட்பாடு என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தகுந்த நடவடிக்கைக்கு ஆதரவு
மேலும், ஈரானின் நடவடிக்கைகளின் தாக்கம் உலகின் அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களிடம் உணரப்படும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் சுமார் 20% இந்த முக்கிய கடல் வழியாக நடைபெறுவதால், ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கைகளில் பங்கேற்கத் தயாராக உள்ளதாக குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, இந்த முக்கிய கடல் பாதையில் பாதுகாப்பை உறுதி செய்ய முன்னேற்பாடுகளில் ஈடுபட்டுள்ள நாடுகளின் முயற்சிகளையும் அவர்கள் வரவேற்றுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |