ஈரான் தன் அறிவிப்பை கைவிட வேண்டும்: உள்நுழைகிறது அமெரிக்கா
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஈரான் இஸ்ரேலை "விரைவில்" தாக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், அந்த முடிவை கைவிட வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
ஈரான் இஸ்ரேல் இடையே போர்பதற்றம் நிலவிவருவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் ஜோ பைடனிடம் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.
நெருக்கடியான சூழலில் ஈரானுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என ஊடகவியலாளர்கள் கேட்ட போது, முடிவை கைவிடுங்கள் என்பதே தமது செய்தி என குறிப்பிட்டுள்ள அவர், இஸ்ரேலைப் பாதுகாப்பதில் அமெரிக்காவின் உறுதிப்பாட்டையும் தெளிவுப்படுத்தினார்.
எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர்
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமெரிக்க அதிபர், 'இஸ்ரேலை பாதுகாப்பதில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். நாங்கள் இஸ்ரேலை ஆதரிப்போம்.
இஸ்ரேலைப் பாதுகாக்க நாங்கள் உதவுவோம், ஈரான் ஒருபோதும் இஸ்ரேல் மீதான தாக்குதலில் வெற்றிபெறாது.
மேலும், உளவுத்துறை தரவுகளை பொதுவெளியில் பகிர முடியாது.மிக விரைவில் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடுக்கும் என்பது உறுதி' என்றார்.
இதேவேளை வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி, இஸ்ரேல் மீதான ஈரானின் உடனடி தாக்குதல் என்பது நிஜம் மட்டுமின்றி சாத்தியமான அச்சுறுத்தல் ஆனால் ஈரான் எப்போது முடிவெடுக்கும் என்பதை அறுதியிட்டு கூற முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அமெரிக்காவும் தயார் நிலையில் இருப்பதாகவே ஜோன் கிர்பி குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |