ரஷ்யாவை தூக்கியெறிந்து சீனாவை ஆயுத கூட்டாளியாக்கியது ஈரான்!!
சமீபத்தில் அமெரிக்கா (USA) மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் ஈரானின் வான் பாதுகாப்பு பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
இந்த நிலையில், அதனை மேம்படுத்தும் நோக்கில் சீனாவிடம் இருந்து J-10C ரக போர் விமானங்கள் வாங்க ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ரஷ்யாவிடம் இருந்து 50 Su-35 விமானங்களை வாங்க ஈரான் ஒப்பந்தம் செய்திருந்தாலும், இதுவரை நான்கு விமானங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
கைவிடப்பட்ட ஒப்பந்தம்
மேலும், ஈரானுக்காக தயாரிக்கப்பட்ட விமானங்கள் அல்ஜீரியாவுக்கு மாற்றி அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலைமையால், ஈரான் தனது கவனத்தை சீன விமானங்களின் பக்கம் திருப்பியுள்ளது.
ஈரான், 2015லேயே J-10 ரக விமானங்களை வாங்க முயன்றிருந்தாலும், பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் ஐநா ஆயுதத் தடைகள் காரணமாக அந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது.
ஆழ்ந்த விருப்பத்தில் ஈரான்
இதேவேளை, கடந்த பத்து ஆண்டுகளாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஈரான் நம்பியிருந்த நிலையில், இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதல்களில் அவை வீழ்ந்துவிட்டன.
இவ்வாறானதொரு பின்னணியில், ரஷ்யா எதிர்பார்த்த அளவில் விமானங்கள் வழங்காததால், ஈரான் புதிய ஆயுத கூட்டாளியைத் தேடுகிறது.
இதன்படி, சீனாவின் J-10C விமானம், விலை குறைவாகவும், செயல்திறனாகவும் இருப்பதால் ஈரான் அதில் ஆழ்ந்த விருப்பம் காட்டி வருவதாக தெரியவருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
