ஈரானின் தாக்குதலில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : முதன்முதலில் பென்டகன் வெளியிட்ட அறிவிப்பு
மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய தாக்குதல்கள் காரணமாக, 8 நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் தூதரகங்கள் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறையின் (பென்டகன்) அதிகாரபூர்வ கண்காணிப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி குவைத், பஹ்ரைன், கத்தார், யுஏஇ, சவுதி அரேபியா, ஈராக், ஓமான், ஜோர்டான் ஆகிய 8 நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளன.
விமானங்கள்,ட்ரோன்கள், எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் அழிப்பு
அதுமட்டுமின்றி எரிபொருள் சேமிப்பு கிடங்குகள் சேதம் அடைந்து உள்ளன. அமெரிக்காவின் 12க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் அழிக்கப்பட்டு உள்ளன. சவுதி அரேபியா மற்றும் ஈராக்கில் அமெரிக்காவின் பல KC-135 ரக எரிபொருள் நிரப்பும் விமானங்கள் அழிக்கப்பட்டன.

துபாயில் உள்ள அமெரிக்க தூதரகம் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளானது. மேலும், குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டியிருந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதலாவது அதிகாரபூர்வ பென்டகன் அறிக்கை
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க படைகளின் உள்கட்டமைப்பை ஈரான் போர் எவ்வளவு தூரம் பாதித்துள்ளது என்பதைக் காட்டும் முதலாவது அதிகாரபூர்வ பென்டகன் அறிக்கை வெளியாகி இருக்கிறது.

இந்த பாதிப்புகளை தொடர்ந்து, மத்திய கிழக்கில் தங்கள் ராணுவ தளங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, இடத்தை மாற்றி அமைப்பது குறித்து பென்டகன் ஆலோசித்து வருகிறது என தகவல் வெளியாகி உள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 18 மணி நேரம் முன்