மத்திய கிழக்கிலுள்ள பொருளாதார மையங்கள் பேராபத்தில்: ஈரான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதல்கள் தொடர்ந்தால் மத்திய கிழக்கில் உள்ள அனைத்து பொருளாதார மையங்களையும் தாக்குவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தாக்குதல்கள் தொடர்ந்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஜெனரல் இப்ராஹிம் ஜப்பாரி எச்சரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அனைத்து பொருளாதார மையங்களும் தாக்கப்படும்
அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்கள் முக்கிய மையங்களைத் தொடர்ந்து தாக்க முடிவு செய்தால், அப்பகுதியில் உள்ள அனைத்து பொருளாதார மையங்களும் அதன்படி தாக்கப்படும் என்று அவர் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை
ஹோர்முஸ் நீரிணை தற்போதைக்கு மூடப்பட்டுள்ளது என்றும், உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை $80 ஐத் தாண்டியதால், அது விரைவில் $200 ஐ எட்டக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஈரான் மீதான தாக்குதல்களில் 700 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக ஈரானிய செம்பிஜறைச்சங்கம் தெரிவித்துள்ளது.
இதுதான் அமெரிக்காவின் மீட்பு : மாணவிகளை புதைக்க தோண்டிய குழிகளை பகிர்ந்துள்ள ஈரான்: நெஞ்சை உருக வைக்கும் பதிவு
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |