ஹோர்முஸ் வழித்தடம் ஆபத்தானது! புதிய அமெரிக்க கப்பல் பாதை குறித்து ஈரான் எச்சரிக்கை
ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையே செல்லும் நீரிணை கிட்டத்தட்ட மூடப்பட்டதால், உலக எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்ததோடு, உலகப் பொருளாதாரமும் ஆட்டம் கண்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் தலைமையிலான கூட்டு கடல்சார் தகவல் மையம், ஓமன் கடல் பகுதியில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புப் பகுதியை அமைத்துள்ளதாகவும், சிக்கித் தவிக்கும் கப்பல்களை அவ்வழியே செல்லுமாறு அறிவுறுத்தி வருகிறது.
இருப்பினும், கடல் மார்க்கத்தைப் பயன்படுத்த முயன்ற இரண்டு வர்த்தகக் கப்பல்கள் தற்போது சிக்கிக்கொண்டுள்ளதாக ஈரானின் அதிகாரப்பூர்வமான செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாறைகள் நிறைந்த பகுதி
இதன்படி ஓமான் கடற்கரைக்கு அருகிலுள்ள கடல் பகுதிகள் பாறைகள் நிறைந்தவை, அதனால் கப்பல்களால் இப்பகுதியிலிருந்து புறப்படவோ அல்லது திரும்பவோ இயலாது, எனவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

முசந்தம் மற்றும் அல்-கைல் ஆகிய இரண்டு தீவுகளுக்கு அருகிலுள்ள ஹோர்முஸ் நீரிணையின் தெற்குக் கடற்கரையானது, ஒரு கடல்வழிப் பாதையாக மாறுவதற்கான புவியியல் திறனைக் கொண்டிருக்கவில்லை.
மேலும் பாறைகள் நிறைந்த மற்றும் ஆழமற்ற தெற்குப் பகுதிகள் வழியாகக் கப்பல்கள் செல்வது மிகவும் ஆபத்தானது என்றும் அந்தச் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |