ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதல் : 133 பொதுமக்கள் பலி
ஈரான் மீது நடத்தப்பட்ட அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 133 ஈரானியப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வொஷிங்டனை தளமாகக் கொண்ட ஈரானிய மனித உரிமைக் குழுவான மனித உரிமைகள் ஆர்வலர் செய்தி நிறுவனம் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளது.
இந்தத் தகவல்கள் ஓர் ஆரம்பகட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டவையாகும் என குறிப்பிடப்படுகின்றது.
அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார்
18 மாகாணங்களில் சுமார் 58 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன என்றும், இதில் தலைநகர் தெஹ்ரானிலேயே அதிகளவிலான சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இராணுவ உயிரிழப்புகள், உட்கட்டமைப்பு மற்றும் கல்வி நிலையங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் மற்றும் கடுமையான இணையத் துண்டிப்புகள் குறித்தும் அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி உள்ளிட்ட 40 அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |