ஈரானிய அச்சம்! ஐரோப்பாவுக்கு அவசர குவிமாடம் - இலங்கையை அடிக்கும் ஹோர்மூஸ்
பிட்டுக்கு மண்சுமந்த சிவபிரான் முதுகில் மதுரையில் விழுந்த அடி உலகின் எல்லா ஜீவராசிகள் மீதும் விழுந்தாக கூறப்படும் புராணக்கதைபோல வெறும் 39 கிலோமீட்டர் அகலமுள்ள ஹோர்மூஸ் நீரிணை மீது விழுந்த அடி தற்போது எல்லோருக்கும் விழுந்துகொள்கிறது.
இன்று அதிகாலையும் இந்த நீரிணைப் பகுதியில் ஒரு கொள்கலன் கப்பலை தாக்கிய ஈரானிய ஏவுகணை அதனை தீப்பிடிக்க வைத்தது.
இவ்வாறா நிலவரங்களை உருவாக்கும் இந்த நீரிணை அதன் மூலம் உலக எரிசக்தி நெருக்கடி என்ற அடியை சாமானியன் முதல் சாம்ராஜ்யங்கள் வரை விழவைத்து மக்களின் கழுத்தை நெரித்துவருகிறது.
இதற்கிடையே ஈரானிய ஏவுகணைகள் ஐரோப்பாவுக்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் பிரான்சை தளமாக கொண்ட உலகின் முக்கிய வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பான தல்ஸ் (Thales) ஐரோப்பாவுக்கு ஒரு புதிய வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு குவிமாட அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளதாக இன்று அறிவித்துள்ளது.
தற்போது ஐரோப்பாவின் கடல் மற்றும் வான்பரபக்குரிய பல அடுக்கு பாதுகாப்பு குவிமாடம் இப்போது ஒருங்கிணைக்கபட்டுள்ளதான தல்ஸ் அறிவித்துளளது.
தற்போதைய மத்திய கிழக்கு போரும் ரஸ்யா மீதான அச்சமும் இப்போது 5,000 கிலோமீற்றர் தூரத்துக்குரிய பாதுகாப்பை ஐரோப்பாவில் பலப்படுத்த தலைப்பபட்டாலும் ஹோர்மூஸ் நீரிணை அடி இப்போது இலங்கையையும் விலைவாசி ஏற்றங்களா அடிப்பதால் மீண்டும் அரகலய கிளர்ச்சி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்திவருகிறது செய்திவீச்சு…
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |