நாட்டை வந்தடைந்த ஈரான் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர்
ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் (Hossein Amir Abdollahian) உள்ளிட்ட குழுவினர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளனர்.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து அந்நாட்டு அரசாங்கத்திற்கு சொந்தமான விசேட விமானம் மூலம் நேற்றிரவு (19) நாட்டுக்கு வந்த குழுவினரை, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய வரவேற்றார்.
அதிபர் மற்றும் பிரதமரைச் சந்தித்தல்
இலங்கைக்கு வருகை தந்துள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பயணத்தின் போது ஈரான் வெளிவிவகார அமைச்சர் அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன் வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |