இலங்கையிலுள்ள ஈரானிய கப்பல் தொடர்பில் வெளியான தகவல்
Colombo
Trincomalee
Sri Lanka
Iran
Ship
By Sumithiran
பல வாரங்களாக கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே தரித்து நின்ற ஈரானிய விநியோக கப்பலான ஐஆர்ஐஎஸ் புஷேர் தனியார் நிறுவனம் ஒன்றின் இழுவைப் படகு மூலம், திருகோணமலைக்கு கொண்டு செல்லப்ப்பட்டது.
கடந்த செவ்வாய்க்கிழமை காலை ஈரானிய கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
கப்பலில் தற்போதும் உள்ள ஈரானிய மாலுமிகள்
இந்தக் நடவடிக்கைகளுக்கு உதவுவதற்காக, 8 தொடக்கம் 10 வரையான ஈரானிய மாலுமிகள் கப்பலில் இருப்பதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்தக் கப்பலில் இருந்த மற்றும் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்து மீட்கப்பட்ட மொத்தம் 236 ஈரானிய மாலுமிகள் நேற்று முன்தினம் இரவு ஈரானுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |