ஈரானில் பெண்களின் ஆடைகளை கண்காணிக்க மீண்டும் காவல்துறை ரோந்து
பெண்கள் ஆடைக் கட்டுப்பாடுகளுக்குக் கீழ்ப்படிவதையும், பொது இடங்களில் தலைமுடியை மறைப்பதையும் உறுதிசெய்ய ஈரானிய காவல்துறையினர் சர்ச்சைக்குரிய ரோந்துப் பணிகளை மீண்டும் தொடங்குகின்றனர் என்று இந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் ஹிஜாப் சட்டங்களைச் செயல்படுத்த "ஒழுக்கக் காவல்துறை" வீதிகளுக்குத் திரும்பும் என்று ஒரு செய்தித் தொடர்பாளர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
காவல்துறை காவலில் உயிரிழந்த மஹ்சா அமினி

தெஹ்ரானில் ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்ட இளம் பெண் மஹ்சா அமினி 10 மாதங்களுக்குப் பிறகு காவல்துறை காவலில் இருந்த நிலையில் உயிரிழந்தார். அவரது மரணம் பாரிய தேசிய எதிர்ப்புகளைத் தூண்டியதை அடுத்து காவல்துறையின் ரோந்து இடைநிறுத்தப்பட்டது.
எனினும், ரோந்துப் பணியை மீண்டும் ஆரம்பிக்குமாறு இஸ்லாமிய கடும்போக்காளர்கள் சில காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஷரியாவின் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஈரானிய சட்டத்தின் கீழ், பெண்கள் தங்கள் தலைமுடியை ஹிஜாப் (தலை முக்காடு) கொண்டு மறைக்க வேண்டும் மற்றும் அவர்களின் உருவங்களை மறைக்க நீண்ட, தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்.
முதலில் எச்சரிக்கும் காவல்துறை

அந்த விதிகள் மதிக்கப்படுவதை உறுதிசெய்து, "முறையற்ற" உடையணிந்ததாகக் கருதப்படும் நபர்களைத் தடுத்து வைப்பதில் அறநெறிக் காவல் பிரிவு பணிபுரிகிறது.
ரோந்துப் பணிகளின் போது, விதிகளுக்கு இணங்காத பெண்களை அதிகாரிகள் முதலில் எச்சரிப்பார்கள் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் சயீத் மொன்டசெரோல்மஹ்தி கூறினார்,
அவர்கள் உத்தரவுகளை மீறினால், காவல்துறையினர் "சட்ட நடவடிக்கையை" தேர்வு செய்யலாம், என்றார்.