ஈரான் புதிய உச்சதலைவர் உயிருடன் இல்லை : ட்ரம்ப் வெளியிட்ட தகவலால் பரபரப்பு
ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மொஜ்தபா கமேனி உயிருடன் இல்லை என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஒருவேளை அவர் உயிருடன் இருந்தால் சரணடைய வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதலில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்த ட்ரம்ப், "ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிருடன் இல்லை என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது" என்று கூறினார்.
அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்பும் ஈரான்
தொலைக்காட்சி ஒன்றுக்கு ட்ரம்ப் சனிக்கிழமை அளித்த பேட்டியில், "ஈரான் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறது; ஆனால் வழங்கப்பட்ட விதிமுறைகள் இன்னும் போதுமானதாக இல்லாததால், நான் அந்த ஒப்பந்தத்தைச் செய்துகொள்ள விரும்பவில்லை," என்று அவர் தெரிவித்தார்.

மேலும், எதிர்காலத்தில் எட்டப்படும் எந்தவொரு ஒப்பந்தமும் "மிகவும் உறுதியானதாக" இருக்க வேண்டும் என்றும் கூறினார். அந்த ஒப்பந்தத்திற்கான நிபந்தனைகள் குறித்து கேட்டபோது, "அந்த நிபந்தனைகள் குறித்து நான் அதை உங்களிடம் கூற விரும்பவில்லை." இருப்பினும், ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை முழுமையாக கைவிடுவது அந்த ஒப்பந்தத்தின் முதன்மையான அங்கமாக இருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |