போர் பதற்றங்களுக்கு மத்தியில் துருக்கி செல்கிறார் ஈரான் அதிபர்
Turkey
Iran
Israel-Hamas War
By Sumithiran
காசா மீதான இஸ்ரேலின் போர் தீவிரமடைவதைத் தடுப்பது எப்படி என்பது குறித்து ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்த துருக்கி சென்றுள்ளார்.
"பலஸ்தீன மக்களை ஆதரிப்பதிலும் ஒடுக்கப்பட்டவர்களின் எதிர்ப்பிலும் ஈரானுக்கும் துருக்கிக்கும் பொதுவான நிலை உள்ளது" என்று ரைசி துருக்கி செல்வதற்கு விமானத்தில் ஏற முன்னர் தெரிவித்தார்.
ரைசியும் எர்டோகனும் பலஸ்தீனம் தொடர்பான
"ரைசியும் எர்டோகனும் பலஸ்தீனம் தொடர்பான சில அடையாள நடவடிக்கையை சந்திப்பில் இருந்து அறிவிக்கக்கூடும்" என்று கிளெம்சன் பல்கலைக்கழக பேராசிரியர் அராஷ் அஜிசி கூறினார்.
"ஆனால் அவர்களின் கவனம் பெரும்பாலும் மோதலை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் அது மேலும் விரிவடையாமல் இருப்பதை உறுதி செய்வதில் இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி