ஈரான் உச்ச தலைவர் குறித்து நீடிக்கும் மர்மம்..! வெளியான கடிதம்
(IRGC) உளவுத்துறைத் தலைவர் மஜித் காதெமி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளே காரணம் என ஈரானின் மூன்றாவது உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரானின் உச்ச தலைவர் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் படுகொலை செய்யப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கையை வெளியிட்டார் என ஏபி செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி யுஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
தளபதிகளின் மரணம் ஈரானியப் படைகளின் சித்தாந்தத்தில் எந்தவொரு 'குலைவையும்' ஏற்படுத்தாது, ஏனெனில் ஈரானியப் படைகளின் வரிசை மிகப்பெரியது" என அதில் மொஜ்தபா கமேனி குறிப்பிட்டுள்ளார்.
வெளியிட்ட பல அறிக்கைகள்
ஈரானின் அதியுயர் தலைவர் அயத்துல்லா கமேனி கொல்லப்பட்ட பிறகு அவரின் மகன் முஜ்தபா கமேனி ஈரானின் புதிய அதியுயர் தலைவராக நியமிக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஒரு மாதமாகிவிட்டது.

தனது தந்தைக்குப் பிறகு உச்ச தலைவராகப் பதவியேற்றதிலிருந்து, கமெனி பொதுவெளியில் தோன்ற இல்லை.
அதன்பிறகு அவர் வெளியிட்ட பல அறிக்கைகள் தேசிய தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டன. ஆனால், அவர் ஊடகங்களில் தோன்றாதது, அவரது உடல்நிலை மற்றும் இருப்பிடம் குறித்த வதந்திகளுக்கு வழிவகுத்தது.
பதவியேற்ற சில நாட்களிலேயே அமெரிக்கா நடத்திய தாக்குதலில் முஜ்தபா கமேனி காயமடைந்துள்ளதாகவும், அவரது முகம் சிதைந்திருக்கக்கூடும் என்றும் நம்புவதாக அமெரிக்கா கூறியது.
பாதுகாப்பு காரணங்கள்
மொஜ்தபா கமேனி அநேகமாக இறந்திருக்கலாம் அல்லது மிக மோசமான நிலையில் இருக்கலாம், ஏனெனில் அவரைப் பற்றி யாரும் இதுவரை கேள்விப்படவில்லை" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.

எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே" கமேனி பொதுவெளியில் தோன்றவில்லை என ஜெனிவாவிற்கான ஈரானின் ஐநா தூதர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |