ஈரானின் துல்லிய தாக்குதல் : 24 மணிநேரத்தில் நான்காவது ஆளில்லா விமானத்தை இழந்தது அமெரிக்கா
ஹோர்முஸ் நீரிணையின் கிழக்குப் பகுதியில், அமெரிக்காவின் MQ-1 ரக உளவு மற்றும் தாக்குதல் ட்ரோன் ஒன்றை, ஈரான் இஸ்லாமிய புரட்சிப் படைப்பிரிவின் (IRGC) வான் பாதுகாப்புப் பிரிவினர் இடைமறித்து அழித்துள்ளதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. ஈரான் சுட்டு வீழ்த்திய அமெரிக்காவின் இத்தகைய ட்ரோன்களில் இது 20-வது ஆகும்.
இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், IRGC-ன் விண்வெளிப் படைப்பிரிவின் வான் பாதுகாப்புப் பணியாளர்கள், மேம்பட்ட புதிய வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி, MQ-1 ரகத்தின் நீடிக்கப்பட்ட தொலைவு (ER) கொண்ட அந்த ட்ரோனைத் துல்லியமாகவும் திறம்படவும் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 மணி நேரத்தில் இழக்கப்பட்ட நான்காவது ட்ரோன்
கடந்த 24 மணி நேரத்தில், அமெரிக்க இராணுவத்தின் இத்தகைய உளவு மற்றும் தாக்குதல் ட்ரோன்களில் நான்காவதாக இது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானின் வான்வெளி என்பது அந்நாட்டின் ஆயுதப் படைகளைப் பொறுத்தவரை ஒரு 'சிவப்புக் கோடு' (எல்லைக்கோடு) என்று மீண்டும் வலியுறுத்தியுள்ள IRGC, வான்வெளியை மீறும் எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயலுக்கும், ஈரானின் படைகள் மிகக் கடுமையான, உறுதியான மற்றும் வலிமையான பதிலடியைக் கொடுக்கும் என்று எச்சரித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |