அமெரிக்க - இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஐ.ஆர்.ஜி.சியின் முக்கிய தளபதி
ஐ.ஆர்.ஜி.சி-யின் "முகம்மது ரசூலல்லாஹ்" படையின் தளபதி ஹசன் ஹசன்சாதே அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானை இலக்குவைத்து நேற்று இடம்பெற்ற தாக்குதலில் ஹசன் ஹசன்சாதே கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தெஹ்ரானில் உள்ள புரட்சிகர காவலர்கள் மற்றும் பசீஜ் படைகளின் தரைப்படைகளை ஒருங்கிணைத்து வழிநடத்தும் பொறுப்பில் ஹசன் ஹசன்சாதே இருந்ததோடு, ஐ.ஆர்.ஜி.சி-யின் "முகம்மது ரசூலல்லாஹ்" படையின் தளபதியாவும் செயற்பட்டுள்ளார்.
தாக்குதல் அலை 86
இவரது மரணம் குறித்து கேள்விகள் எழுந்தாலும், ஈரானின் விக்கிப்பீடியாவான “Persian Wikipedia“ ஹசன் ஹசன்சாதேவின் மரணத்தை 29.03.2026 என திகதியிட்டுள்ளது.

மேலும் ஈரானின் உண்மையான வாக்குறுதி 4 தாக்குதல் அலை 86 இன் அடிப்படை ஹசன் ஹசன்சாதேவின் மரணத்துக்கு பதிலடி என அடிகோடிட்டுள்ளன.
எனினும் அமெரிக்க தரப்புக்கள் இன்னும் தாக்குதலுக்கு உரிமைகோராத நிலையில் இவரது மரணம் குறித்த அறிக்கை எவையும் வெளிப்படுத்தப்படவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 7 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்