மத்திய கிழக்கையும் தாண்டி விரிவடையும் போர் :IRGC மிரட்டல்
புதிய இராணுவ நடவடிக்கையை ஈரான் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால், போர் மத்திய கிழக்கு நாடுகளை தாண்டியும் விரிவடையும் என ஈரான் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரானும் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் போராக மாறியது. வளைகுடா (மத்திய கிழக்கு) நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அத்துடன் ஹோர்முஸ் நீரிணையை மூடியது.
நாற்பது நாளுக்கு மேலாக நீடித்த போர்
கடந்த பெப்ரவரி மாதம் 28ம் திகதி தொடங்கிய இந்த போர் சுமார் 40 நாட்களுக்கு மேலாக நீடித்தது. பின்னர் பாகிஸ்தான் மத்தியஸ்தராக திகழ, அமெரிக்கா- ஈரான் இடையில் இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. நிரந்தர போர் நிறுத்தத்திற்கான திட்டங்கள் முன்மொழியப்பட்டன.

ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்க மறுக்கிறது. அதேவேளையில் அமெரிக்காவின் சில உத்தரவாதத்தை நம்ப ஈரான் மறுத்து வருகிறது.
இதனால் ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமென்றாலும் தாக்குதல் நடத்தலாம் எனத் தெரிகிறது. ட்ரம்ப் இது தொடர்பாக தொடர்ந்து மிரட்டி வருகிறார்.
தனது அரசியல் தேவைக்காக முன்னாள் போராளிகளை பயன்படுத்தும் சுமந்திரன் : யாழ்.பல்கலை விரிவுரையாளர் குற்றச்சாட்டு
IRGC மிரட்டல்
இந்தநிலையில் ஈரான் புட்சிகர காவல்படை (IRGC), எங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் போர் மத்திய கிழக்கு நாடுகளை தாண்டி விரிவடையும் என எச்சரித்துள்ளது.

அமெரிக்கா- ஈரான் இடையில் போர் மூண்டால் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம். ஹவுதி அமைப்பும் ஈரானுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |