படகு வழங்கலில் முறைகேடு! வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் போராட்டம்

Jaffna Government Of Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Fisherman
By Erimalai Dec 29, 2025 10:43 AM GMT
Report

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கத்திற்கு உட்பட்ட சங்க உறுப்பினர்கள் இன்று(29) வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் வடமராட்சி கிழக்கு கடல் தொழிலாளர் சமாசத்திற்குட்பட்ட அனைத்து துணைச் சங்கங்களுக்கும் இரண்டு படகுகள் வெளி இணைப்பு இயந்திரத்துடன் இலவசமாக வழங்கப்பட்டன.

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் துப்பாக்கிச் சூடு : இருவர் அதிரடி கைது

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் துப்பாக்கிச் சூடு : இருவர் அதிரடி கைது


குற்றச்சாட்டு

அந்தப் படகுகள் சமாச நிர்வாகத்தினர் முன்பாக கலந்துரையாடலின் மூலம் தெரிவு செய்து வழங்கப்பட்டு வந்தன.

படகு வழங்கலில் முறைகேடு! வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் போராட்டம் | Irregularities In Boat Supply Protest Vadamaratchi

இந்த படகு வழங்கலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல சங்கங்களின் பிரதிநிதிகள் தொடர் குற்றச்சாட்டை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருப்பதாக வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு மக்கள் பிரதேச செயலகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில், தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட இரு படகுகள் தொடர்பில் முறைகேடு நடந்துள்ளது இது தொடர்பாக நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாபெரும் மோசடி

இரு படகுகளையும் நாகர்கோவில் மேற்கு கடற்தொழிலாளர் சங்கம் ஏலத்தில் விற்று விட்டு அதன் பெறுமதியான 18 இலட்சம் ரூபாவை பக்கச்சார்பாக ஒரு சிலருக்கு மட்டும் பகிர்ந்தளித்துள்ளனர்.

படகு வழங்கலில் முறைகேடு! வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் போராட்டம் | Irregularities In Boat Supply Protest Vadamaratchi

இது தொடர்பாக சங்க அங்கத்தவர்கள் எங்களுக்கு அறிவிக்கவில்லை.இது மாபெரும் மோசடி.இதற்கு சமாசமும் துணை போயுள்ளது.

மீள் குடியேறிய காலத்திலிருந்து இதுவரை எமக்கு எந்த வித கொடுப்பனவும் கிடைக்கவில்லை.

மக்கள் எல்லோருக்கும் பொதுவாக வழங்கப்பட்ட படகை விற்பனை செய்துவிட்டு அதன் தொகையை ஒரு சிலருக்கு மட்டும் பகிர்ந்து கொடுத்துள்ளமை நாகர்கோவில் கடற்தொழிலாளர் சங்கத்தின் மிக மோசமான செயல். இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்திருக்கிறோம் .பிரதேச செயலருக்கும் கடிதம் ஒன்றை கையளிக்கிறோம் உரியவர்கள் இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு தமக்கு நீதியை பெற்றுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இதன் போது போராட்டக்காரர்களை சந்தித்து வழங்கப்பட்ட கடிதத்திற்கு உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு விரைவில் தீர்வு வழங்குவதாக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் உறுதியளித்தார்.

பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்: வெளியான வர்த்தமானி

பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்: வெளியான வர்த்தமானி

திருமலை கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய ஏவுகணையின் பாகம்

திருமலை கடற்பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய ஏவுகணையின் பாகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019