எரிபொருள் விலை திருத்தம் குறித்து வெளியான அறிவிப்பு
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய ஒக்டோபர் மாதத்திற்குரிய எரிபொருள் விலை திருத்தம் இன்று (30) இரவு வெளியிடப்படவுள்ளது.
இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், வழக்கமாக மாதத்தின் கடைசி நாளிலேயே எரிபொருள் விலை திருத்தம் இடம்பெறும். விலை திருத்தத்தின் போது டீசல் லீற்றர் ஒன்றுக்கு 70 ரூபாய் மானியத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
டீசலுக்கு வழங்கப்படும் மானியம்
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் எரிபொருள் விநியோகிக்கும் நிறுவனங்கள் தமக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து அறிவித்துள்ளன.

அதற்கமைய சில நிறுவனங்கள் டீசலுக்கு 120 ரூபாய், 135 ரூபாய், 192 ரூபாய் மற்றும் 247 ரூபாய் என்ற வகையில் நஷ்டத்தைச் சந்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளன.
எரிபொருள் மானியத்தை வழங்குவதன் மூலம் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் பாரிய சுமையை எதிர்கொள்கின்றது, வருட இறுதியில் கூட்டுத்தாபனத்திற்கு நஷ்டம் ஏற்படாத வகையில் செயற்பட்டு வருகின்றோம். டீசலுக்கு வழங்கப்படும் மானியம் பெட்ரோலுக்கு வழங்கப்படாது“ என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |