ஓக்டோபர் 1ஆம் திகதியின் பின்னரும் ஊரடங்குச் சட்டமா?? இராஜாங்க அமைச்சர் தகவல்
Corona
Curfew
People
Channa Jayasumana
SriLanka
By Chanakyan
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதியின் பின்னர் ஊரடங்குச்சட்டம் நீடிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் குறைவு என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தின் ஊடாக அதிகாரிகள் எதிர்பார்த்த நோக்கங்கள் நிறைவேறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அனைத்து தரப்பினரும் பொறுப்புணர்ச்சியுடனும், முன் பாதுகாப்புடனும் செயற்பட்டால் ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவதில் சிக்கல் இருக்காது.
அத்துடன் மதுபானக் கடைகள் தற்போதைக்கு திறப்பது பொருத்தமானது அல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,