கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : இஷாரா செவ்வந்தி தொடர்பில் வெளியான தகவல்
கொழும்பு அளுத்கடே நீதிமன்ற வளாகத்தில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவராகக் குறிப்பிடப்பட்ட "இஷாரா செவ்வந்தி" டுபாய்க்குத் தப்பிச் சென்றது தற்போது தெரியவந்துள்ளது.
அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "இஷாரா செவ்வந்தி" டுபாய்க்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்டது.
படுகொலையை நெறிப்படுத்தியவர்கள்
கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலையை டுபாயில் இருந்து கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த ஆகியோரால் திட்டமிடப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கையை செயல்படுத்துவதில் இஷாரா செவ்வந்தி முக்கிய பங்கு வகித்தார்.
டுபாய்க்கு தப்பியோட்டம்
கமாண்டோ சாலிந்தா என்ற கொலையாளியே இந்தக் கொலையைச் செய்ததாகத் தெரியவந்தது. இஷாரா செவ்வந்திதான் இந்தக் கொலையைச் செய்ய கமாண்டோ சாலிந்தாவை வழிநடத்தியதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொலை நடந்த சில நாட்களுக்குப் பிறகு,இஷாரா செவ்வந்தி டுபாய்க்குத் தப்பிச் சென்றுள்ளார்.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
