செவ்வந்தியிடமிருந்த இந்திய அடையாள அட்டை! யாருமறியா திடுக்கிடும் தகவல்கள்
நேபாளத்தில் இடம்பெற்ற இஷார செவ்வந்தியின் கைது தொடர்பில் மேலும் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், செவ்வந்தி கைது செய்யப்பட்ட போது, தமிழினி என்ற போலி பெயருடன் அவர் வீடொன்றில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
குறித்த பெயருடன் கூடிய இந்திய அடையாள அட்டையை ஜே.கே பாய் தயார் செய்து கொடுத்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒலுகலவின் நகர்வு
இது குறித்து மேலும் தெரியவருகையில், ஒக்டோபர் 10 ஆம் திகதி சம்பந்தப்பட்ட நடவடிக்கைக்காக உதவி காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஒலுகலவும், கிஹான் சில்வா என்ற காவல் அதிகாரியும் நேபாளத்திற்குச் சென்றிருந்தனர்.
அங்கு அவர்களுக்கு நேபாளத்திற்கான பிரதித் தூதுவர் சமீரா முனசிங்கவும், அவரது கணவரும் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து, அந்த நாட்டு காவல்துறையினரையும் தொடர்பு படுத்தி வைத்துள்ளனர்.
அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்நாட்டு காவல்துறையினர் வேறொரு தரப்பினர் மூலம் ஜே.கே. பாயைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் அவரிடம் ரோஹன் ஒலுகல இஷாராவைப் பற்றி கேட்டபோது, தனக்கு எதுவும் தெரியாது என்று பதிலளித்துள்ளார்.
எனினும், காவல்துறையினர் இஷாராவின் தொலைபேசி எண்ணை அவரிடமிருந்து கண்டுபிடித்து, மேற்கொண்ட விசாரணையில் இஷாராவின் இருப்பிடம் கண்டுடறியப்பட்டுள்ளது.
இஷாராவின் கைது
பின்னர், நேபாள காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தை விசாரித்தபோது, இந்தியாவின் பெங்களூரிலிருந்து வந்த தமிழனி என்ற பெண், இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில் வாடகைக்கு தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
இதற்காக தமிழினி என்ற பெண் மாதத்திற்கு 6,000 நேபாள ரூபாய் செலுத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் தமிழனி என்ற பெயரில் தங்கியிருக்கும் நபர் இஷாரா செவ்வந்தி என்பது தெரியவந்துள்ளது.
அனைத்து தகவல்களையும் சரிபார்த்த பிறகு, ஒலுகலவும் நேபாள காவல்துறையினருடன் தொடர்புடைய இடத்திற்குச் சென்ற மற்றொரு அதிகாரியும் கீழ் தளத்தில் தங்கி, மற்றைய அதிகாரிகளை மேல் தளத்திற்கு அனுப்பி இஷாராவைக் கைது செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, நேபாள காவல்துறையினர் இஷாரா கைது செய்தபோது, அவள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றே கூறப்படுகிறது, பின்னர் ஒலுகல சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்றுள்ளார்.
இந்திய அடையாள அட்டை
பின்னர், இஷாராவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பிறகு, மதுகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் ஒரு மாதம் ஒளிந்து கொண்டிருந்தாக தெரிவித்துள்ளார்.
அதனைதொடர்ந்து, பத்மேவின் அறிவுறுத்தலின் பேரில், மித்தேனியா பகுதிக்குச் சென்று சுமார் ஒரு மாதம் அங்கேயே தங்கிய நிலையில், பெக்கோ சமன் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அங்கு செய்து கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின்னர், யாழ்ப்பாணம் சென்று, மூன்று நாட்கள் தங்கி, ஜே.கே. பாயுடன் படகு மூலம் இந்தியாவுக்குத் தப்பி சென்றுள்ளார்.
குறித்த பயணத்திற்கு சுமார் ஐந்து மணி நேரம் எடுத்ததாகவும், ஒரு பெரிய படகில் சிறிது தூரம் சென்று, பின்னர் ஒரு சிறிய படகில் இந்தியாவுக்குள் நுழைந்ததாகவும் இஷாரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுமார் இரண்டு வாரங்கள் தங்கிய பிறகு, ஜே.கே பாய் தமிழனி என்ற பெயரில் ஒரு இந்திய அடையாள அட்டையை தனக்கு வழங்கி பின்னர் நேபாளம் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
