திருகோணமலையில் ஒரு சில இடங்களில் கடையடைப்பு போராட்டம் முன்னெடுப்பு
வட கிழக்கில் கடையடைப்பு போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கபபட்ட போதிலும் ஒரு சில பகுதிகளை தவிர திருகோணமலை வழமை போல இயங்கி வருகின்றது.
பாடசாலைகளில் மாணவர்களது வருகை குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தபால் திணைக்களம் முற்றாக மூடப்பட்டுள்ளதுடன் ஏனைய கடைகள் வியாபார நிலையங்கள் வழமை போல இங்கிவருவதையும் மக்கள் வழமை போல செயற்பட்டு வருவதையும் காணக்கூடியதாகவுள்ளது.
பெரும்பாலான கடைகள்
இந்தநிலையில், திருகோணமலை தம்பலகாமம் பகுதியிலும் கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தம்பலகாமம் பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டும் ஒரு சில கடைகள் திறக்கப்பட்டிருப்பட்டும் காணப்பட்டுள்ளது.
வர்த்தகர்கள்
இதன் போது மக்களின் நடமாட்டமும் குறைந்து வீதி வெறிச்சோடி காணப்பட்டுள்ளதுடன் தம்பலகாமம் வர்த்தகர்கள் போராட்டத்திற்கு முழு ஆதரவை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தமிழரசுக் கட்சியினால் அறிவிக்கப்பட்ட கடையடைப்பு ஹர்த்தால் போராட்டத்திற்கு இஸ்லாமிய வர்த்தகர்கள் தங்களது ஆதரவை வழங்க மறுத்ததோடு தமிழ் பிரதேசங்களில் உள்ள தங்களது கடைகளை திறந்து எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா
