நாடளாவிய ரீதியில் திடீர் மின் வெட்டு : வெளியான காரணம்
முன்றாம் இணைப்பு
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்துண்டிப்புக்கான காரணம் வெளியாகியுள்ளது.
அதன்படி, கொழும்பு பிரதான அமைப்பில் ஏற்பட்ட சமநிலையின்மை காரணமாக இந்த மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்னும் ஒரு சில மணித்தியாலங்களில் மின்சாரம் வழமைக்கு கொண்டுவரப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இரண்டாம் இணைப்பு
நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று (09) முற்பகல் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டுவரும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
நாட்டின் பல பாகங்களில் திடீரென மின்சார தடைப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, கேகாலை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இது குறித்து நாம் மின்சார சபையை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, எமது ஊடகம் மின்சார சபையை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்ற போதிலும் தற்போது வரை மின்சார சபையை அணுக முடியவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)