அகில இலங்கை ரீதியில் முதலிடம்..! வணிகப் பிரிவில் மட்டக்களப்பு சாதனை
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (31) நள்ளிரவு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவரான சுபைதீன் முஹம்மட் ஃபர்தான், வணிகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
அகில இலங்கை ரீதியில் முதல் இடம்
இதேவேளை, உயர்தரப் பரீட்சை பெறுபேறுளின் படி பௌதீக விஞ்ஞான பாடத்தில் (கணிதப் பிரிவு) தமிழ் மொழி மூலம் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

தெய்வேந்திரன் திருக்குமரன் என்ற மாணவனே அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.
மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்திலுள்ள வெயங்கொட பண்டாரநாயக்க மத்திய கல்லூரியின் ஈஷானி மனோதா என்ற மாணவியே இவ்வாறு முதலிடம் பெற்றுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்