கொரோனாவுடன் சேர்த்து அச்சுறுத்தும் மற்றுமொரு நோய் - மக்களே அவதானம்
நாட்டில் ‘டெங்கு’ நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்திருக்கிறது.
கடந்த 21 தினங்களில் 650 டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள். கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பிரதானியான டொக்டர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் டெங்கு பரவும் எச்சரிக்கை நிலவுகிறது. ஆகையினால் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு டெங்கு ஒழிப்புப் பிரிவு கேட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 7 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள்.
நாட்டில் தற்போது கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்துச் செல்கையில் டெங்கும் அதிகளவில் பரவி வருவது மக்களை மேலும் அச்சத்திற்குள் ஆளாக்கியுள்ளது.