முடங்கும் வைத்தியசாலைகள் - தொடர் போராட்டத்தில் வைத்தியர்கள்
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் (24) தொடர்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் சாதகமான பதில்களை வழங்கவில்லை என அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
48 மணித்தியாலங்களின் பின்னரும் பணிப்பகிஷ்கரிப்பை மேலும் நீடிப்பதா என்பது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வழமைப் போல் இயங்கும்
இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில், தாம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உதவியற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இலவச சுகாதார சேவை மற்றும் வைத்தியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு வழங்கிய இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்தத் தவறியமையினாலேயே இந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், மகப்பேற்று வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், சிறுநீரக வைத்தியசாலைகள் மற்றும் புற்றுநோய் வைத்தியசாலைகள் என்பன வழமைப் போல் இயங்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |