தனிமைப்படுத்தப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்!
Corona
Samagi Jana Balawegaya
SriLanka
Harsha D Silva
Asoka Abesinge
By Chanakyan
நாடாளுமன்ற உறுப்பினர்களான அசோக அபேசிங்க, லக்ஸ்மன் கிரியெல்ல, ஹர்ஷ டி சில்வா மற்றும் துஷார இந்துனில் ஆகியோர் சுய தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து அவருடன் தொடர்பிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுய தனிமைப்படுத்தலை கடைபிடிக்குமாறு சுகாதார அமைச்சு அறிவித்தல் விடுத்திருந்தது.
இந்நிலையிலேயே இவர்கள் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க எதிர்வரும் புதன்கிழமை கொவிட் பரிசோதனை செய்துகொள்ளவுள்ள அதேவேளை, ஹர்ஷ டி சில்வா நாளைய தினம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்