இஸ்ரேலும் ஹமாஸும் இரகசிய பேச்சு : கசிந்த தகவல்
காசாவில் (Gaza) முன்மொழியப்பட்ட 60 நாள் போர் நிறுத்தம் தொடர்பாக, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் கட்டாரில் மறைமுக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹமாஸ் (Hamas) முன்மொழிந்த பல திருத்தங்களை நிராகரித்த போதிலும், ஹமாஸுடன் மறைமுக பேச்சுவார்த்தையை நடத்த இஸ்ரேல் இன்று கட்டாருக்கு குழுவொன்றை அனுப்பியுள்ளது.
இராஜதந்திர தடைகள் இருந்தபோதிலும், ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற மோதலைத் தணிக்க, கட்டார், எகிப்து மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தர்கள், தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.
போர் நிறுத்தம்
இந்தநிலையில், குறித்த பேச்சுவார்த்தைகளில் போர் நிறுத்தம் தொடர்பில் ஒரு திருப்புமுனை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை நேற்று முன்தினம் (04.07.2025) , 60 நாள் போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவுக்கு "நேர்மறையான பதிலை" அளித்ததாகவும், விவாதங்களுக்குத் தயாராக இருப்பதாகவும் ஹமாஸ் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், நிரந்தர போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் போர் மீண்டும் தொடங்காது என்ற உத்தரவாதம் உட்பட, திருத்தங்களை கோரியதாக பலஸ்தீனியர்கள் கூறுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
