உலக நாடுகளே இது போதுமா ..! இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட ஆதாரம்(காணொளி)
காசாவின் மிகப்பெரிய மருத்தவமனையான அல் ஷிபா மருத்துவமனையை ஹமாஸ் அமைப்பினர் எவ்வாறு பயன்படுத்தினர் என்பதை தக்க ஆதாரத்துடன் காணொளியாக இஸ்ரேல் படை வெளியிட்டுள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தி ஆயிரத்திற்கும் அதிகமானவர்களை கொன்று 200 ற்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றது ஹமாஸ் அமைப்பு.
காசா மீது மூர்க்கத்தனமான தாக்குதல்
இதற்கு பதிலடி தரும் வகையில் காசா மீது மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்திவருகிறது இஸ்ரேல்.இதில் பெண்கள்,குழந்தைகள்,முதியவர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காசாவில் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், மருத்துவமனைகளை தங்களது செயல்பாட்டிற்கு பயன்படுத்தி வருவதாக ஹமாஸ் மீது இஸ்ரேல் இராணுவம் குற்றம்சாட்டியது.
மருத்துவமனைகளில் ஹமாஸ் அமைப்பின் சுரங்கப்பாதை
ஆனால், மருத்துவ நிர்வாகம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இதை மறுத்து வந்தனர். எனினும், இஸ்ரேல் இராணுவம் மருத்துவமனைகளில் ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தும் சுரங்கப்பாதைகளை கண்டுபிடித்து காணொளி வெளியிட்டு வருகிறது.
Dear world, is this enough proof for you? pic.twitter.com/Z3HNDPNV3O
— Israel Defense Forces (@IDF) November 22, 2023
காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபாவிலும் சுரங்கப்பாதை உள்ளது என குற்றம்சாட்டியது. இந்த நிலையில், டியர் உலகமே, இந்த ஆதாரம் போதுமா உங்களுக்கு? என்ற கருத்துடன் இஸ்ரேல் இராணுவம் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |