இஸ்ரேல் நடத்திய பயங்கர தாக்குதல்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
Palestine
Israel-Hamas War
Gaza
By Dilakshan
தென்கிழக்கு காசாவில் உள்ள குவைத் ரவுண்டானாவை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 21 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், குறித்த தாக்குதலில் 150 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை, இந்த தாக்குதலினால் பலர் பலத்த காயம் அடைந்துள்ளமையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா கண்டனம்
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக அழிக்கும் வரை போர் நிறுத்தம் ஏற்படாது என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த போரினால் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.
மேலும், காசாவின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் போர் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 16 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்