காசாவில் தொடரும் பதற்றம் : வைத்தியசாலையை தாக்கி முன்னேறுகிறது இஸ்ரேல் இராணுவம்
Israel
Israel-Hamas War
Gaza
By Kathirpriya
தெற்கு காசாவிலுள்ள மருத்துவமனையொன்றின் மீது இஸ்ரேலின் தரைப்படை நடத்திய தாக்குதலில் பலர் படுகாயமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதன்படி, தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள அல்-அமல் வைத்தியசாலை மீதே இஸ்ரேல் தரைப்படை தாக்குதல் நடத்தியுள்ளது.
அமைதியற்ற சூழல்
எதிர்பாராத வேளையில் இடம்பெற்ற இந்த தாக்குதலினால் அந்தப்பகுதியில் அமைதியற்ற சூழல் உருவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்ததாக பலஸ்தீன செஞ்சிலுவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் தரைப்படை
இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்த மேலதிக தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான சுமார் 3 மாதங்களாக தொடரும் போரில், தற்போது காசாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இஸ்ரேல் தரைப்படை வேகமாக முன்னேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி