இஸ்ரேலுக்கு அமெரிக்கா சொன்ன தகவல்: அவசரமாக திட்டத்தை மாற்றிய நெதன்யாகு
ஈரான் (Iran) அணு ஆயுத சோதனை நடத்தியுள்ளதாக தகவல்கள் கசிந்த நிலையில், இஸ்ரேல் (Israel) தனது தாக்குதல் திட்டத்தை முற்றாக மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தியாதாக வெளியான தகவல்களானது, சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் தற்போது பெரும் விவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது.
இந்தி நிலையில், கடந்த ஐந்தாம் திகதி ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளிலும் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இஸ்ரேலில் நிலநடுக்கம்
குறித்த நிலநடுக்கமானது, ஈரானின் செம்னான் மாகாணத்தில் உள்ள அராடன் என்ற இடத்தில் 10 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததுடன், மையப்பகுதியிலிருந்து சுமார் 110 கிமீ தொலைவில் தெஹ்ரான் வரை இந்த நடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதனை தொடர்ந்து, முதல் நிலநடுக்கத்திற்கு சில நிமிடங்களுக்குப் பிறகு, நள்ளிரவில் இஸ்ரேலில் இரண்டாவது நிலநடுக்கம் உணரப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.
சிஐஏ தகவல்
இந்த நிலையில், குறித்த சம்பவமானது, இரு நாடுகளுக்கிடையில் நடந்து வரும் மோதல் நிலைக்கு மத்தியில் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அமெரிக்க சிஐஏ அமைப்பின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ், “ ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அணு ஆயுத சோதனை என்று சந்தேகிக்கிறோம். அவர்கள் அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தில் தீவிரமாக இருக்கிறார்கள் என்றே நாங்கள் கருதுகிறோம்” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |