ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்திய இஸ்ரேல்
ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்திவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானுடன் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, அரசியல் மட்டத்திலான உத்தரவுகளுக்கு இணங்க, ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் போர் நிறுத்தம் செய்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், லெபனானில் தங்களது படைகள் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக “போர் மற்றும் தரைவழி நடவடிக்கைகளை” தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.
இரண்டு வார கால போர் நிறுத்தம்
முன்னதாக அமெரிக்காவுடன் இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் , ஈரானின் 10 அம்ச முன்மொழிவின் அடிப்படையில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கும் என்று அதன் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதன் பின்னணியில் போர் நிறுத்தம் குறித்த நிலைப்பாட்டை இஸ்ரேலும் அறிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |