ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்தம்: திடீரென மத்திய கிழக்குக்கு பறந்த பிரித்தானிய பிரதமர்

United Kingdom Middle East World Keir Starmer
By Shalini Balachandran Apr 08, 2026 08:34 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in உலகம்
Report

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வளைகுடா நாடுகளுக்கான தனது உத்தியோகபூர்வப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், நேற்றிரவு அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே எட்டப்பட்ட இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன்னரே இந்தப் பயணம் திட்டமிடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா பிராந்தியத்தில் துணிச்சலுடன் பணியாற்றி வரும் பிரித்தானியப் படை வீரர்களுக்குப் பிரதமர் நேரில் நன்றி தெரிவிப்பதுடன் அப்பகுதியில் உள்ள நட்பு நாடுகளின் கூட்டுத் தற்காப்பிற்காக பிரித்தானியா வழங்கிய பாதுகாப்பு உதவிகளையும் அவர் நேரில் பார்வையிடவுள்ளார்.

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணி விடுவிப்பு - அநுரவின் அதிரடி அறிவிப்பு

வடக்கில் இராணுவம் வசமுள்ள காணி விடுவிப்பு - அநுரவின் அதிரடி அறிவிப்பு

பாதுகாப்பு அமைச்சகம் 

பிராந்தியப் பாதுகாப்பு குறித்துப் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை 110-இற்கும் மேற்பட்ட ட்ரோன் (Drone) தாக்குதல்களைப் பிரித்தானியப் படைகள் வெற்றிகரமாக இடைமறித்துத் தடுத்துள்ளன.

அத்தோடு, பிரித்தானிய விமானப்படை (RAF) சுமார் 1,600 மணிநேரத்திற்கும் மேலாக வான்வெளிப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்தம்: திடீரென மத்திய கிழக்குக்கு பறந்த பிரித்தானிய பிரதமர் | Keir Starmer Gulf Visit Uk Forces Ceasefire

இந்தப் பயணத்தின் மூலம் பிராந்திய நிலைத்தன்மையில் பிரித்தானியாவின் பங்களிப்பை உறுதிப்படுத்த ஸ்டார்மர் திட்டமிட்டுள்ளார்.

தற்போது எட்டப்பட்டுள்ள தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மனதார வரவேற்பதாகத் தெரிவித்துள்ள பிரதமர் ஸ்டார்மர், இதனை ஒரு நிரந்தர அமைதி உடன்படிக்கையாக மாற்றப்போவதாக உறுதியளித்துள்ளார்.

குறிப்பாக, உலக வர்த்தகத்திற்கு முக்கியமான ஹார்முஸ் நீரிணையை நிரந்தரமாகத் திறப்பதற்கும் மற்றும் அமைதியை நிலைநாட்டவும் நட்பு நாடுகளுடன் இணைந்து பிரித்தானியா தீவிரமாகப் பாடுபடும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் : சாதனை படைத்த வடமாகாணம்

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் : சாதனை படைத்த வடமாகாணம்

கொழும்பில் மசாஜ் மையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த சமூக பிறழ்வான விடுதிகள் சுற்றிவளைப்பு

கொழும்பில் மசாஜ் மையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த சமூக பிறழ்வான விடுதிகள் சுற்றிவளைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026