காசா மக்களுக்காக குரல் கொடுக்கும் கனடா
காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் கோரிக்கையொன்றை அவுஸ்திரேலியா, கனடா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகள் கூட்டாக முன்வைத்துள்ளன.
ரபா மீதான தரைவழித் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையிலேயே, குறித்த நாடுகள் இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளன.
உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி குறித்த நாடுகள் ஏற்கனவே கோரிக்கைகளை முன்வைத்திருந்தன.
வெளியிட்டுள்ள அறிக்கை
இந்த நிலையில், தற்போது ரபா மீது இஸ்ரேல் வான்வழி மற்றும் கடல்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக அவுஸ்திரேலியா, கனடா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகளின் பிரதமர்கள் ஒன்றிணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், ரபா மீதான தரைவழி தாக்குதல்களையும் தீவிரப்படுத்துவதாக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள அறிவிப்பு தொடர்பில் குறித்த நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன.
சுமார் 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் தற்போது ரபாவில் தஞ்சம் புகுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உடனடி போர் நிறுத்தம்
இந்த நிலையில், குறித்த பகுதியில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் பாரிய அழிவை ஏற்படுத்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அழிவுகரமான சூழலை ஏற்படுத்தும் தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொள்ள கூடாதென அவுஸ்திரேலியா, கனடா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகள் கோரியுள்ளன.
உடனடி போர் நிறுத்தம் தற்போது அத்தியாவசியமான ஒன்று எனவும் இது தொடர்பான தனது நண்பர்களின் கோரிக்கைக்கு இஸ்ரேல் செவிமடுக்க வேண்டுமெனவும் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.
Canada, Australia, New Zealand prime ministers in joint statement: “A military operation into Rafah would be catastrophic.” https://t.co/V7QDSemdgo
— Laura Rozen (@lrozen) February 15, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |