இஸ்ரேலுக்கு ஆயிரக்கணக்கான இலங்கையர்களை அனுப்பவுள்ள அரசாங்கம்
இஸ்ரேல்(Israel) மீதான ஹமாஸ்(Hamas) தாக்குதலின் பின்னர் நாட்டில் பணியாற்றிய வெளிநாட்டவர்கள் வெளியேறியதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு 30,000 இலங்கையர்களை அனுப்ப தயாராகி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய , உக்ரைன் போருக்கு ஓய்வுபெற்ற இராணுவத்தினரை கூலிப்படையாக அனுப்பியதாக நாட்டில் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலில் சிவில் வேலைகளுக்கு 30000 பேரை அனுப்புவதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாக வெளிவிவகார அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களின் எண்ணிக்கை
இதேவேளை, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறிய இலங்கையர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் ஹமாஸ் மற்றும் ஈரானுடன் நேரடியாகப் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலுக்கு இவ்வளவு பேரை வேலைக்கு அனுப்ப அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |