அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்! இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள வல்லரசுகள்
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை தொடர்ந்து வானில் பறந்த அமெரிக்க வான்படையும் Boeing KC-135 ரக அமெரிக்க விமானமும் அவசரமாக ஈராக்கில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அமெரிக்காவின் பாதுகாப்பு சபை அவசரமாக கூடியுள்ளதுடன் இஸ்ரேலின் பாதுகாப்பு சபையும் கிழக்கு அடி பங்கரில் கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பேசிய இஸ்ரேலின் பாதுகாப்பு சபையினர் வதந்திகளை நம்ப வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
ஈரானின் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இஸ்ரேலை சுற்றியுள்ள நாடுகளின் வான் பரப்பு பொது மக்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்தத் தாக்குதலை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கண்டித்துள்ளார்.
மேலும், சைபிரஸிலுள்ள பிரித்தானியாவின் வான் படை விமானங்கள் ஈரானின் வான்படை விமானங்களை சுட்டு வீழ்த்தும் நோக்குடன் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..! |