அமெரிக்காவுக்கு எதிராக கடுமையான கருத்தை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர்
Benjamin Netanyahu
United States of America
Israel
Israel-Hamas War
By Sumithiran
இஸ்ரேலின் பாதுகாப்பு விவகாரங்களை அந்த நாடே முடிவு செய்யும் என்றும், அது அமெரிக்காவின் பாதுகாப்பு மண்டலம் (புரோடக்டரேட்) அல்ல என்றும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு புதன்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
காஸாவில் நடைமுறையில் உள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் போா் நிறுத்தம் குறித்து அந்த நாட்டு துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸுடன் விவாதிப்பதற்கு முன்னதாக, இந்தக் கடுமையான கருத்தை நெதன்யாகு வெளியிட்டாா்.
இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள அச்சம்
காஸாவில் நிறுத்தப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படும் சா்வதேச பாதுகாப்பு படையினா், அந்தப் பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் திறனைக் குறைக்கலாம் என்று இஸ்ரேலில் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
அந்த அச்சத்தைப் போக்கும் வகையில் நெதன்யாகு இவ்வாறு கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 13 மணி நேரம் முன்
