காசாவில் இஸ்ரேல் படை கொடூரம் : 24 மணிநேரத்தில் 700 பாலஸ்தீனர்கள் கொன்று குவிப்பு
காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திவரும் கொடூரமான தாக்குதல்களில் 24 மணிநேரத்தில் 700 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய போர் விமானங்கள் அகதிகள் முகாம்கள், மக்களின் குடியிருப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் தாக்குதலில் பெருமளவானோர் கொல்லப்பட்டனர்.
பலமுனைத்தாக்குதல்
அத்துடன் இராணுவத்தினர் தாங்கிகள் மற்றும் ஆட்லறிகள் மூலமும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் மற்றும் காயமடைந்தவர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் ஷெஜாயா பகுதியில் இடிந்து விழுந்த கட்டடங்களில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
GAZA GOVERNMENT MEDIA OFFICE to Al-Jazeera: More than 700 were killed in Gaza during the past 24 hours. More than one and a half million displaced people in the Gaza Strip.
— The Palestine Chronicle (@PalestineChron) December 3, 2023
There is no safe place in the Gaza Strip, and the occupation is committing massacres throughout it.… pic.twitter.com/PgtzfaKas6
16,000 பாலஸ்தீனியர்கள் கொலை
ஒக்டோபர் 7 முதல், 6,500 சிறுவர்கள் மற்றும் 4,000 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட,16,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் 40,652 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசாவில் உள்ள பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Following a bloody night where scores of Palestinians were reportedly killed and more wounded across the Gaza Strip, the Palestinian Resistance declared that it had targeted over 60 Israeli soldiers with three explosive devices in the Juhr Al-Dik areahttps://t.co/3XshaOPMyy pic.twitter.com/G3BLBxfFAd
— The Palestine Chronicle (@PalestineChron) December 3, 2023
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |