ஹமாஸ் அமைப்பிற்கு ஏற்பட்ட பேரிழப்பு
ஹமாஸ் அமைப்பின் ஏழு மூத்த படைத் தளபதிகளில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தின் அரபு செய்தித் தொடர்பாளர் அவிச்சாய் அட்ரே எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் படைப்பிரிவு ஹமாஸின் காசா படைப்பிரிவுகளைத் தொடர்ந்து சிதைத்தது" என்று அட்ரே எழுதியுள்ளார்.
ஏழு மூத்த படைத் தளபதிகளில்
"ஏழு மூத்த படைத் தளபதிகளில், நான்கு பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர், மேலும் மூன்று மூத்த தளபதிகள் மட்டுமே உள்ளனர்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
மூன்று தளபதிகளில் ஹமாஸின் அல்-கஸ்ஸாம் படையணியின் தளபதியான எஸ் அல்-தின் அல்-ஹத்தாத் மற்றும் இரண்டு பட்டாலியன் தளபதிகளான இமாத் அஸ்லிம் மற்றும் ஜாபர் ஹசன் அஜீஸ் ஆகியோர் அடங்குவர்.
#عاجل جيش الدفاع يواصل تفكيك لواء غزة في حماس. ومن أصل سبعة قادة اللواء الكبار تم حتى الآن تصفية أربعة ولم يتبقَ سوى ثلاثة قادة كبار ضمن سلسلة القيادة هم قائد اللواء وقائديْ كتيبتين.
— افيخاي ادرعي (@AvichayAdraee) December 21, 2023
?عز الدين حداد
?عماد اسليم
?جبر حسن عزيز
من خلال الصور التي تم العثور عليها خلال إحدى عمليات… pic.twitter.com/xvXg8aFcZv
சரணடையாவிட்டால்
மீதமுள்ள ஹமாஸ் தளபதிகளை சரணடையுமாறு இஸ்ரேல் படைத்தரப்பு அறிவித்துள்ளது.
எஞ்சியுள்ள தளபதிகள் இஸ்ரேலியப் படைகளிடம் சரணடையாவிட்டால், "அவர்களை விரைவில் ஒன்றிணைக்கும் மற்றொரு சந்திப்பை நாங்கள் ஏற்பாடு செய்வோம்" என்று இஸ்ரேலிய படைத்தரப்பின்செய்தித் தொடர்பாளர் ஹமாஸ் அமைப்பை எச்சரித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |