ஹமாஸ் அமைப்பின் மற்றுமொரு தளபதி பலி
ஹமாஸ் (Hamas) அமைப்பின் நுக்பா படைப்பிரிவு தளபதி அப்துல்-ஹாதி சபா தெற்கு காசாவில் (Gaza) உள்ள கான் யூனிஸ் பகுதியில் வைத்து கொல்லப்பட்டதை இஸ்ரேல் (Israel) பாதுகாப்பு படை உறுதிப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் அப்துல் ஹாதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இரானுவம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி கிபுட்ஸ் நிர் ஓஸ்-இல் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை அப்துல் ஹாதி சபா வழிநடத்தியதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு படை
இது குறித்த எக்ஸ் தள பதிவில், "இஸ்ரேல் பாதுகாப்பு படையின் உளவுத்துறை மற்றும் ஐ.எஸ்.ஏ. தாக்குதலில் நுக்பா படைப்பிரிவு தளபதியான அப்துல் ஹாதி சபா கொல்லப்பட்டார்," என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
மேலும் கொல்லப்பட்ட அப்துல் ஹாதி சபா இஸ்ரேல் பாதுகாப்பு படைகளுக்கு எதிராக பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களை வழிநடத்தியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இதேவேளை ஒக்டோபர் 7 ஆம் திகதி நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் பின்புலமாக இருந்த அனைத்து பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது.
🔴Abd al-Hadi Sabah, a Nukhba Platoon Commander in the Western Khan Yunis Battalion was eliminated in an intelligence-based IDF and ISA strike.
— Israel Defense Forces (@IDF) December 31, 2024
Abd al-Hadi Sabah—who operated from a shelter in the Humanitarian Area in Khan Yunis—was one of the leaders of the infiltration into… pic.twitter.com/KMC5HAXNfA
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |