சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹமாஸ் உறுப்பினருக்கு மரண தண்டனை: காணொளியை வெளியிட்ட இஸ்ரேல்
1996ஆம் ஆண்டு ஜெருசலேமில் பேருந்துகளை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டு, இஸ்ரேல் சிறையில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹமாஸ் உறுப்பினர், ஹசன் சலாமேவுக்கு மரண தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் தெரிவித்துள்ளார்.
1996ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஜெருசலேமில் நடத்தப்பட்ட பேருந்து குண்டுவெடிப்புகளில் 45 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்த தாக்குதல்களை திட்டமிட்டதில் ஹசன் சலாமே முக்கிய பங்காற்றியதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனிய கைதிகள்
1996ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சலாமேவுக்கு இஸ்ரேல் இராணுவ நீதிமன்றம் 46 ஆயுள் தண்டனைகளையும் மேலும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையையும் விதித்தது.

இதனிடையே, பாலஸ்தீனிய கைதிகளுக்கு குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மரண தண்டனை விதிக்க அனுமதிக்கும் சட்டத்தை இஸ்ரேல் நாடாளுமன்றம் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றியது.
அந்தச் சட்டத்திற்கு பென்-க்விர் உள்ளிட்ட இஸ்ரேலிய வலதுசாரி அரசியல்வாதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஹசன் சலாமேவை சிறையில் சந்தித்த பென்-க்விர், தாம் வெளியிட்ட காணொளியில் அவரை மரண தண்டனைக்கு உட்படுத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டால் இதுபோன்ற கைதிகளுக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
סגירת מעגל ענקית עבורי!
— איתמר בן גביר (@itamarbengvir) September 27, 2026
כנער עמדתי ברחובות והפגנתי אחרי פיגועי התופת הנוראיים בקו 18 בירושלים. עשרות חפים מפשע נרצחו, ומשפחות שלמות נחרבו.
לפני כשבועיים הגעתי לכלא ופגשתי פנים אל פנים את הארכי מחבל חסאן סאלמה - מבכירי חמאס, חברו ושותפו של יחיא סינוואר ימ״ש, שנשלח בידי הצורר… pic.twitter.com/6HvGFKAroJ
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |